< Back
மாநில செய்திகள்
தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயற்சி

தினத்தந்தி
|
5 July 2023 12:24 AM IST

தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட நம்பன்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம். மாற்றுத்திறனாளி. இவரது வீட்டிற்கு செல்லும் பாதையை கறம்பக்குடி தாசில்தார், தனி நபருக்கு பட்டா போட்டுக் கொடுத்ததை கண்டித்தும், உடனடியாக பட்டாவை ரத்து செய்து பாதை அமைத்து தரக்கோரியும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நம்பன்பட்டியில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக துண்டுபிரசுரங்கள் மூலம் அறிவித்திருந்தனர். இதனால், நம்பன்பட்டியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, நம்பன்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுனர். போராட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சொர்ணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாற்றுத்திறனாளி வீட்டிற்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கவும், வீடு கட்டி குடியிருக்க வீட்டுமனை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்