< Back
மாநில செய்திகள்
ஜவுளி நிறுவன அதிபரை மண்எண்ணெய் குண்டுவீசி கொல்ல முயற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

ஜவுளி நிறுவன அதிபரை மண்எண்ணெய் குண்டுவீசி கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
5 Dec 2022 12:14 AM IST

விருதுநகரில் ஜவுளி நிறுவன அதிபரை மண்எண்ணெய் குண்டு வீசி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


விருதுநகரில் ஜவுளி நிறுவன அதிபரை மண்எண்ணெய் குண்டு வீசி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கார்மெண்ட் நிறுவனம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 29). கார்மெண்ட்ஸ் ( ஜவுளி நிறுவனம்) கவனித்து வருகிறார். சம்பவத்தன்று நிறுவனத்தின் முன்னால் இரவு கட்டிலில் படுத்திருந்தார்.

அப்போது 2 மர்மநபர்கள் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு இவர் படுத்திருந்த கட்டில் மீது 2 மண்எண்ணெய் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு பதறியடித்து எழுந்த விக்னேஸ்வரன் கட்டில், போர்வை மற்றும் கொசுவலையில் தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்தார்.

போலீசார் ஆய்வு

இதுபற்றி சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

மேலும் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ள பகுதிகளிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்