விழுப்புரம்
தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி
|பிரம்மதேசம் அருகே தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி தப்பி ஓடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
பிரம்மதேசம்
பிரம்மதேசம் அருகே உள்ள வைடப்பாக்கம் கிராமம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன்(வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது தலையில் ஹாலோ பிளாக் கல்லை தூக்கிப்போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் தலையில் படுகாயம் அடைந்த அய்யப்பன் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனின் மீது மர்ம நபர் எதற்காக கல்லை தூக்கிப்போட்டார்? அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.