< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
உரக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி
|17 July 2023 12:15 AM IST
சின்னசேலத்தில் உரக்கடை உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் கூகையூர் மெயின்ரோடு சண்முகா நகரில் வசித்து வருபவர் கருப்பையா (வயது 49). இவர் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கருப்பையா தனது மனைவியுடன் உரக்கடைக்கு சென்றார். இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள் கருப்பையா வீட்டின் முன்பக்க மரக்கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது அந்த பகுதியில் ஆட்கள் வரவே மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த கருப்பையா தனது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.