< Back
மாநில செய்திகள்
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; 12 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; 12 பேர் கைது

தினத்தந்தி
|
25 Oct 2023 3:00 AM IST

தேனியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போடி அருகே சில்லமரத்துப்பட்டி அரசு பள்ளியில் மாணவியிடம் தீண்டாமையை கடைபிடித்ததாக கூறப்படும் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட முயன்றனர்.

இதற்காக அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி அவர்கள் முற்றுகையிட முயன்றதால், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்