< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
இணைப்பு சாலை திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
|6 Jun 2022 11:55 PM IST
இணைப்பு சாலை திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு சென்று வர தார் சாலை அமைத்து தர வேண்டி நீண்ட நாளாக தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் விசுவக்குடி தொண்டமாந்துறை இணைப்பு சாலை திட்டத்திற்கு ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானதற்கு தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், விசுவக்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.