< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொறியியல் படிப்புகளில் கூடுதலாக 10,536 இடங்கள் - அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி
|9 Jun 2022 10:07 PM IST
மாணவர்கள் சேர்க்கை காட்டாத பாடப்பிரிவுகளில் 974 இடங்கள் மூடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
பொறியல் படிப்புகளில் வேலைவாய்ப்புகளை அளிக்கக் கூடிய பிரிவுகளில் இடங்களை அதிகப்படுத்தவும், குறைவான மாணவர் சேர்க்கையைக் கொண்ட பிரிவுகளில், இடங்களை குறைக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வேலைவாய்ப்புகளை அளிக்கும் பொறியியல் படிப்புகளில் கூடுதலாக 10,536 இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் மாணவர்கள் சேர்க்கை காட்டாத பாடப்பிரிவுகளில் 974 இடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.