< Back
மாநில செய்திகள்
எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து கொதிகலனில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து கொதிகலனில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

தினத்தந்தி
|
29 Aug 2023 12:40 PM IST

உளுந்தை கிராமத்தில் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளி கொதிகலனில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

பேரம்பாக்கம்,

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூராம் வயது (20) என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து தொழிலாளியாக பணி செய்து வருகிறார். அவர் இந்த தனியார் எண்ணெய் நிறுவனத்தில் அருகிலேயே உளுந்தை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த ராஜூ ராம் பணி முடித்துவிட்டு கீழே இறங்கி வரும் போது திடீரென அருகில் இருந்த கொதிகலனில் கால் தவறி உள்ளே விழுந்தார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கம்பெனியில் இருந்த பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்