புதுக்கோட்டை
அரசு பள்ளியில் பணிக்கு வராத ஆசிரியர்
|அரசு பள்ளியில் பணிக்கு வராத ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை அருகே கொப்பம்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வராததால் மாணவ- மாணவிகளின் கல்வி திறன் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையிலும் ஆசிரியர் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ளதாகவும், இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி கற்ப்பது பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஆசிரியரை நியமிக்க கோரியும் மாணவ-மாணவிகள் சிலர் மற்றும் அவர்களது பெற்றோர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். மேலும் கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர் கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.