பெரம்பலூர்
நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
|நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
குன்னம்:
வழி கேட்டார்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சித்தராம்பாள்(வயது 60). இவருக்கு பீல்வாடி அருமடல் சாலையில் சிறுகுடல் கிராமத்தில் வயல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சித்தராம்பாள் வயலுக்கு சென்று கணவரை பார்த்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், கீழப்புலியூர் கிராமத்திற்கு எப்படி செல்வது? என்று சித்தராம்பாளிடம் வழி கேட்டுள்ளார். அவருக்கு கீழப்புலியூர் செல்லும் வழியை கூறிவிட்டு, சித்தராம்பாள் நடந்து சென்றார்.
சங்கிலி பறிப்பு
ஆனால் அந்த நபர், சித்தராம்பாளை பின் தொடர்ந்து சென்று அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.
இது குறித்து சித்தராம்பாள் மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.