< Back
மாநில செய்திகள்
அம்சமாரியம்மன் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அம்சமாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
4 April 2023 7:01 PM GMT

தியாகதுருகம் அருகே அம்சமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் ஊராட்சியில் பிரசித்திபெற்ற அம்சமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்