< Back
மாநில செய்திகள்
செலுத்திய பணத்தை திருப்பித்தர வியாபாரிகள் கோரிக்கை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

செலுத்திய பணத்தை திருப்பித்தர வியாபாரிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
14 Aug 2022 10:48 PM IST

ராமநாதபுரம் நகராட்சி மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் செலுத்திய பணத்தை திருப்பித்தருமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராமநாதபுரம் நகராட்சி மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் செலுத்திய பணத்தை திருப்பித்தருமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனு

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி மீன் மார்க்கெட் வியாபாரிகள் முனியசாமி, முத்துமுருகன், குமார், அமீன் உள்ளிட்டோர் நகராட்சி தலைவர் கார்மேகத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி மீன் மார்க்கெட் கடந்த ஆண்டு திறக்கப்பட்டு குத்தகைதாரர் மூலம் ரூ.50 ஆயிரம் வீதம் செலுத்தி 40 கடைகள் மீன் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்ட மீன் மார்க்கெட் செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. உரிமம் வழங்கியும் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. பணம் செலுத்திய வியாபாரிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் நகராட்சி ஆணையாளர் உள்பட பலருக்கும் மனு கொடுத்து உள்ளோம். எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் செலுத்திய குத்தகை தொகையை திருப்பி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் கூறினார்.

மேலும் செய்திகள்