அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேனியில் டி.டி.வி தினகரன் போட்டி
|தேனி மக்களவை தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, அ.ம.மு.க இன்று வெளியிட்டது. அதன்படி, தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். திருச்சி தொகுதியில் செந்தில் நாதன் போட்டியிட உள்ளார். தேனி தொகுதியில் தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் வி.டி நாராயணசாமியும் போட்டியிடுகிறார்கள்.