< Back
மாநில செய்திகள்
எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவிலில்   பால்குட ஊர்வலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

தினத்தந்தி
|
12 Aug 2022 11:10 PM IST

எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மோகனூர்:

மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளிகிழமையையொட்டி பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிகிழமையையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் பால்குடத்தை கெமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்று, புனித நீராடி சிறப்பு பூஜை செய்து பால்குடத்தை எடுத்து பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் 18 பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்