நாமக்கல்
ஆடி அமாவாசையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|ராசிபுரம்:
ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் நித்திய சுமங்கலி மாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கூனவேலம்பட்டி அழியா இலங்கை அம்மன் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், குருக்கபுரம் அத்தனூர் அம்மன் கோவில், கொழிஞ்சிப்பட்டி பண்ணை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.