< Back
மாநில செய்திகள்
அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
12 Jun 2022 5:47 PM GMT

மணலூர்பேட்டையில் அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் அமைக்கப்பட்ட யாக சாலையில் சிறப்பு யாக சாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்