< Back
மாநில செய்திகள்
பாணாவரத்தில் பராமரிப்பு இன்றி கிடக்கும் பூங்கா உடற்பயிற்சி கூடம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

பாணாவரத்தில் பராமரிப்பு இன்றி கிடக்கும் பூங்கா உடற்பயிற்சி கூடம்

தினத்தந்தி
|
8 July 2022 6:40 PM IST

பாணாவரத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சியில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் தாய் திட்டத்தின் கீழ் 2016 - 2017-ம் நிதியாண்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் முறையான பராமரிப்பு இல்லாமல் புல் பூண்டு முளைத்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் உடற்பயிற்சி மையத்திற்கு பெரும் பொருட்செலவில் வாங்கப்பட்ட உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாடின்றி துருப் பிடித்து வீணாகிறது. எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடற்பயிற்சி கூடம்

மேலும் செய்திகள்