< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அம்மா மினி கிளினிக்' திட்டம் முடிந்து விட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
|11 Nov 2023 3:38 PM IST
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடர முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
அம்மா மினி கிளினிக் திட்டம் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய திட்டங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் முடிந்து விட்டது. அதை மீண்டும் தொடரவும் முடியாது. அதே சமயம் நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது 5 ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.