அமித்ஷாவின் வருகை தேர்தலில் எதிரொலிக்கும் - குஷ்பு பேட்டி
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"தமிழ்நாடு முழுவதும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆட்சி அமைத்தே தீருவோம் அதில் என்ற மாற்றமும் இல்லை. பாஜக இருந்தால் தான் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தமிழக வருகை பலனளிக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்?. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் செயலபடுத்துகிறார்" என்று கூறினார்.