< Back
மாநில செய்திகள்
மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் - தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு
மாநில செய்திகள்

மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் - தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

தினத்தந்தி
|
18 Aug 2022 5:23 AM GMT

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

சென்னை,

வாகன போக்குவரத்தில் வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்,

அதில், வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது.

வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளின் எரிச்சல் ஏற்படுத்துதல் கூடாது. நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும்போது தவறான நோக்கில் தொடக்கூடாது.

பெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் கேட்கக்கூடாது. எந்தவொரு பயணிக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அரசு, நடத்துநர் இல்லாத போது ஓட்டுநரின் பொறுப்பு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்