< Back
மாநில செய்திகள்
ஆம்பூர் நகராட்சி கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஆம்பூர் நகராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
31 May 2022 12:11 AM IST

ஆம்பூர் நகராட்சி கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆம்பூர்

ஆம்பூர் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பி.ஏஜாஸ் அகமது தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் மற்ற செலவினங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது. நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். இதற்கு நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது விரைவில் அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். நகராட்சி ஆணையாளர் ஷகிலா, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றம் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்