< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதி காவலாளி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதி காவலாளி பலி

தினத்தந்தி
|
21 Oct 2022 2:12 PM IST

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதி காவலாளி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் வெண்மனம்புதூரை சேர்ந்தவர் ஆனந்தவேல் (வயது 56). இவர் மப்பேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்தவேல் வேலையை முடித்துவிட்டு மப்பேட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.

கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய போது திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி வந்த ஆம்புலன்ஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆனந்தவேலை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் விபத்து ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் குமார் (38) 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மப்பேடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

மப்பேடு சப் - இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்