< Back
மாநில செய்திகள்
அம்பேத்கர் பிறந்தநாள்.. அ.தி.மு.க. சார்பில் 14-ந்தேதி மரியாதை
மாநில செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்.. அ.தி.மு.க. சார்பில் 14-ந்தேதி மரியாதை

தினத்தந்தி
|
12 April 2024 1:46 PM IST

அம்பேத்கரின் பிறந்தநாள் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

"சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்த நாளான 14.04.2024 - ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்