< Back
மாநில செய்திகள்
இந்து ராஷ்டிரம் அமைவது பேரிடர் என்று அம்பேத்கர் கூறினார் - இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா
மாநில செய்திகள்

'இந்து ராஷ்டிரம் அமைவது பேரிடர் என்று அம்பேத்கர் கூறினார்' - இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா

தினத்தந்தி
|
27 Jan 2024 9:16 AM IST

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக டி.ராஜா தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியாவை இந்துத்துவா என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து ராஷ்டிரம் என்ற மதவாத நாடாக அறிவிக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் இந்து ராஷ்டிரம் என்பதை அம்பேத்கர் நிராகரித்தார்.

மேலும் இந்து ராஷ்டிரம் என்பது அமைந்துவிட்டால் அதைவிட பேரிடர் நமது நாட்டிற்கு எதுவும் இல்லை என்று அம்பேத்கர் கூறினார். இன்றைக்கு அந்த பேரிடரை நமது நாடு எதிர்கொண்டிருக்கிறது."

இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.



மேலும் செய்திகள்