< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அம்பேத்கர் பிறந்தநாள்: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
|14 April 2024 8:48 AM IST
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.