திண்டுக்கல்
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
|திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாள்
நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேடசந்தூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், வேடசந்தூர் தொகுதி செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வர்த்தகதொழில் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கபாண்டியன், அம்பேத்கர் சிலை அமைப்புக்குழு ஆலோசகர் சசி, செயலாளர் வெற்றிச்செல்வன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புரட்சி பாரதம்
வேடசந்தூர் அம்பேத்கர் சிலை பராமரிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் தேவி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டாலின் ராஜா, வேல்முருகன், முனியாண்டி, கவியரசன் ஒன்றிய பொறுப்பாளர்கள் சதீஷ்குமார், சூர்யா, மகேந்திரவர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ராஜ்குமார், உறுப்பினர் டோனால்டுசாம்பவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் முருகவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயலாளர் கிறிஸ்டோபர், மாநில துணை செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இடையக்கோட்டை
இடையக்கோட்டை அருகே உள்ள கள்ளிமந்தையத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலித் விடுதலை இயக்கம் மாநில துணைத்தலைவர் ராமர் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்சியில் தி.மு.க. மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமாணி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இதேபோல் இடையக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் வடிவேல் தலைமையில் கட்சி கொடியேற்றி அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.
நிலக்கோட்டை மினி பஸ்நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் செயலாளர் போதுராசன் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தொகுதி செயலாளர் ஜெயபிரகாஷ், நகர செயலாளர் திருப்பதி, மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், திண்டுக்கல் மண்டல செயலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை ஒன்றியம், சிலுக்குவார்பட்டி பஸ்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் அணி சார்பில் மாநில துணைச் செயலாளர் மணிகண்டன் தலைமை அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிெமாழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்
வேடசந்தூரில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிசெல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். துணை பொதுச்செயலாளர் கனியமுதன், நில உரிமை மீட்பு இயக்கம் மாநில துணை செயலாளர் உலகநம்பி, மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தமிழன், தொகுதி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், வேடசந்தூர் ஒன்றிய துணை செயலாளர் விடுதலை வளவன் விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழழகன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நத்தத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் மயில்ராஜ் ஆகியோர் தலைமையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.