< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அமாவாசை சிறப்பு வழிபாடு
|18 Jun 2023 12:15 AM IST
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹரமங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.