< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்
|4 Aug 2022 11:52 PM IST
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் 12 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அணையில் இருந்து 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. 90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 87.14 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 2,106 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3,790 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.