< Back
மாநில செய்திகள்
தாம்பரம் கமிஷனராக அமல்ராஜ் பொறுப்பேற்றார்
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரம் கமிஷனராக அமல்ராஜ் பொறுப்பேற்றார்

தினத்தந்தி
|
7 Jun 2022 1:52 PM IST

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகர முதல் போலீஸ் கமிஷனராக இருந்த ரவி, ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய கமிஷனராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். இவர், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பதவி வகித்து வருகிறார்.

இந்தநிலையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக எல்லையில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துக்கு முக்கியத்துவம் தரப்படும். குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் கமிஷனரகத்தை மேம்படுத்தவும், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக எல்லை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்