தூத்துக்குடி
ஆழ்வார்திருநகரியில் குப்பையில் திடீர் தீவிபத்து
|ஆழ்வார்திருநகரியில் குப்பையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் மரங்கள் கருகி சேதமடைந்தன.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள தென்கால் வாய்க்கால் கரையோரம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில் மழைக்காலங்களில் குப்பைகளில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீ அருகில் உள்ள முச்செடிகள், தென்னை மரம் மற்றும் வாழை மரங்களிலும் பற்றி எரிந்து சேதமடைந்தன. மேலும், குப்பை கிடங்கு பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் ஞானதுரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.