செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள்
|மாமல்லபுரத்தில் முன்னாள் மாணவர்கள் 27 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சந்தித்து கொண்டனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டில் பயின்று முடித்த 85 மாணவ, மாணவிகள் வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த மாணவ, மாணவிகள் அனைவரையும் அதில் இணைத்து தகவல்களை பரிமாரிக்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அனைவரும் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடி சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி முன்னாள் மாணவ, மாணவிகள் 85 பேர் தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து மாமல்லபுரம் கடற்கரை வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று சந்தித்து கொண்டனர். அப்போது பல்வேறு துறைகளில் பணியாற்றும் தங்கள் பணிகள் குறித்தும், தங்கள் குடும்பங்கள் பற்றியும் ஒவ்வொருவரும் கருத்து பரிமாறி கொண்டனர்.
மேலும் தாங்கள் பயின்றபோது பள்ளி நாட்களில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பிறகு அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் தங்களுடன் பயின்று வறுமையில் இருந்து வரும் முன்னாள் மாணவி ஒருவருக்கு கடை வைக்க அனைத்து மாணவர்களும் இணைந்து நிதி உதவி வழங்கினர்.