ராணிப்பேட்டை
51 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
|பாணாவரத்தில் 51 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 1970-71 -ம் ஆண்டு 11-ம் வகுப்பில் 55 மாணவர்கள் பயின்றனர். இவர்கள் சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி பாணாவரத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்களான சந்திரன், சுந்தரம், உமாபதி, மீனா, சரோஜா ஆகியோர் மாணவர்கள் சந்திப்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பழைய மாணவர்களில் சிலர் சப்-கலெக்டர், காவல்துறை அதிகாரி, அரசுத்துறை அதிகாரிகள், தனியார் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் தங்களது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.
ஏழ்மை நிலையிலிருந்த தங்களை கல்வி மட்டுமே உயர்த்தியதாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இதில் 55 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.