< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
|6 March 2023 12:15 AM IST
திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளியில் 1983-வது ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 40 ஆண்டுக்கு பின்னர் சந்தித்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். பின்னர் ஆசிரியர்கள் ராமர், ஜோசலின் டேனியல் ரோஸ் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக 40 வருடங்களுக்கு பின்னர் சந்தித்து கொண்டவர்கள் செல்பி எடுத்துகொண்டனர். மேலும் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பசுமையான நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், முதன்மை கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியாளருமான லிங்கராஜ் செய்திருந்தார்.