< Back
மாநில செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

ஆறுமுகநேரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் மிகவும் பழமை வாய்ந்த கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1976-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவ, மாணவிகள் 47 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள ஐக்கிய வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்க தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்களான ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சுகுமார், தொழில் அதிபர்கள் ராமநாதன், சிவசங்கர், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பிரேம்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சாமுவேல், ரைமென்ட், பெனிட், உதயகுமார், மாதவன், பாஸ்கர் சுயம்பு, முன்னாள் மாணவர் மனைவி உதயம் ஆகியோர் தாங்கள் படித்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மலரும் நினைவாக எடுத்துக் கூறினார்கள்.

மேலும் செய்திகள்