< Back
மாநில செய்திகள்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க மாற்று ஏற்பாடு
விருதுநகர்
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க மாற்று ஏற்பாடு

தினத்தந்தி
|
26 April 2023 1:01 AM IST

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.


விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வயது முதிர்ந்த ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவாகாத நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க மறுக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர் நோய் பாதிப்பால் நடக்க இயலாத நிலையில் இருந்த போதிலும் ரேஷன் கார்டுதாரர்தான் நேரில் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலை உள்ளது. இதுபற்றி வழங்கல் துறை அதிகாரியிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் வயது முதிர்ந்த மற்றும் நோய் பாதிப்படைந்த ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்