தர்மபுரி
உலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் அன்னதானம்
|தர்மபுரி:
உலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமை தாங்கினார். மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் மோகன், தகடூர் விஜயன், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான எஸ்.ஆர்.வெற்றிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் வடிவேல், நகர பொருளாளர் பார்த்திபன், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர துணை செயலாளர்கள் அறிவாளி, சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், பலராமன், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், ராஜா, மாதையன், மாதேஷ், நாகராஜன், முன்னா, கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.