< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டையில்அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அன்னதானம்மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டையில்அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அன்னதானம்மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கினார்

தினத்தந்தி
|
15 April 2023 12:15 AM IST

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு அன்னதானம் வழங்கினார்.


திருவெண்ணெய்நல்லூர்,

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி திருமலா தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமை தாங்கி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதைத்தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக அ.தி.மு.க. நிர்வாகிகளும் அம்பேத்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்தனர்.


மேலும் செய்திகள்