< Back
மாநில செய்திகள்
திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் - விஜயகாந்த்
மாநில செய்திகள்

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் - விஜயகாந்த்

தினத்தந்தி
|
24 April 2023 4:13 PM IST

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழகத்தில் இந்தாண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருபுறம் கூறியிருக்கும் நிலையில், மற்றொரு புறம் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளிப்பது யாரை ஏமாற்றும் செயல்? இது தான் திராவிட மாடல் ஆட்சியா?

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுக்காமல் தற்போது திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும். விளையாட்டு மைதானத்திலும் மது அருந்தினால் வன்முறைக்கு வழிவகுக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்