< Back
மாநில செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.752 கோடி நிதி ஒதுக்கீடு -  தமிழக அரசு
மாநில செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.752 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு

தினத்தந்தி
|
26 Aug 2022 11:04 AM IST

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.752 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ. 752 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 424 கோடியும் , ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்