< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 படித்து விட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை: திருத்தணியில் போலி டாக்டர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பிளஸ்-2 படித்து விட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை: திருத்தணியில் போலி டாக்டர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2022 2:07 PM IST

திருத்தணியில் பிளஸ்-2 படித்து விட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சத்யசாய் நகரில் வசிப்பவர் பூபாலன் (வயது 50). இவர் திருத்தணி அக்கையநாயுடு தெருவில் உள்ள ஒரு வீட்டில் கிளீனிக் நடத்தி டாக்டர் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிளஸ்-2 முடித்துவிட்டு ஒருவர் மருந்து ஊசிகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் காவலன் (பொறுப்பு), திருத்தணி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் நேற்று போலி கிளீனிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஆய்வு செய்தபோது பூபாலன் பிளஸ்-2 மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

இது தொடர்பாக மாவட்ட இணை இயக்குநர் காவலன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருத்தணி போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் பூபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபி (40) உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்