கள்ளக்குறிச்சி
சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு
|திருக்கோவிலூரில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு நகரமன்ற தலைவர் தகவல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சி கூட்டம் செவலை ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த நகரமன்ற தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டு நகராட்சி முழுவதும் உள்ள 27 வார்டுகளிலும் வடிகால், சாலை வசதி, சீறுபாலம் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை கலைஞரின் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சீரிய முயற்சியால் ரூ.6 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.