< Back
மாநில செய்திகள்
முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
மாநில செய்திகள்

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
20 March 2023 10:52 AM IST

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

சென்னை

2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு

* ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு

* கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ,2000 ஆக அதிகரிப்பு

* இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு"

* 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்"

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

* உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இருமடங்காக உயர்வு!

* சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு .

மேலும் செய்திகள்