< Back
மாநில செய்திகள்
சட்டசபையில் துணை மதிப்பீடு தாக்கல்: காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு..!
மாநில செய்திகள்

சட்டசபையில் துணை மதிப்பீடு தாக்கல்: காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு..!

தினத்தந்தி
|
18 Oct 2022 8:29 PM IST

சென்னை:

சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

துணை நிலை மதிப்பீடுகள் ரூ.3,795.72 நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கிறது. புது பணிகள் புது துணை பணிகளுக்கு நிதி ஒதுக்க இது உதவுகிறது.

போக்குவரத்து துறையில் சொத்துக்களை உருவாக்குவதற்காக மாநில போக்குவரத்து கழகங்களுக்கு பங்கு மூலதான உதவியாக ரூ.500 கோடியை அரசு அனுமதிக்க உள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ள தணிப்பு பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஆகியவற்றிற்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் ரூ.373.50 கோடி அனுமதித்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வெள்ள தடுப்பு பணிக்கு கூடுதலாக ரூ.134.22 கோடி, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 7 பாசன கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.104.13 கோடி அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் ரூ.296.76 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.33.56 கோடியை அரசு அனுமதித்துள்ளது. உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 11 புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு ரூ.97.05 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்