செங்கல்பட்டு
அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த செங்கல்பட்டு நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - எம்.எல்.ஏ. தகவல்
|அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த செங்கல்பட்டு நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2011-2022-ம் நிதியாண்டில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பாரதியார் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், ஜே.சி.கே. நகர் முல்லை தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.6 லட்சம், சின்னம்மன்கோயில் தெரு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், சையத் யாகூப் தெருவிற்கு சிமெண்ட் சாலைக்கு ரூ.5 லட்சம், நத்தம், நடுத்தெரு மற்றும் கைலாசநாதர் கோயில் தெருவில் சிறு மின்விசை பம்பு மற்றும் குடிநீர் டேங்க் அமைக்க ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பச்சையம்மன் கோவில் தெரு பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்விசை பம்பு டேங்க் அமைக்க ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், சுடுகாட்டு தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், தட்டான்மலை தெரு முகப்பில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 லட்சம், கே.கே.தெரு, 3-வது குறுக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.6 லட்சம், சுந்தர விநாயகர் கோவில் தெரு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.49.75 லட்சத்தை செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.