தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப்பிரிவு தொடங்க நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
|தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப்பிரிவு தொடங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீவிரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்வதற்காக மாநில நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு ஒன்று 383 பணியாளர்களை கொண்டு அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்தநிலையில், தீவிரவாத தடுப்புப்பிரிவு அமைப்பதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு டி.ஜி.பி. பரிந்துரை கடிதம் எழுதினார். டி.ஜி.பி பரிந்துரையை கவனமுடன் பரிசீலித்த அரசு, தீவிரவாத தடுப்புப்பிரிவு தொடங்குவதற்கு அனுமதி அளித்தும், அதற்கான பணியாளர்களை நியமிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
மேலும், புதிய வாகனங்கள் வாங்குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு முதல்கட்டமாக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.