< Back
மாநில செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை
மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை

தினத்தந்தி
|
8 Dec 2023 2:21 PM IST

மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க 1 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்