நாமக்கல்
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
|‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பேரூராட்சியில் வரலாற்று புகழ்வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பாக விசேஷ காலங்களில் சோமேஸ்வரர் தெப்ப உற்சவ விழா வழக்கமாக நடைபெறும். காலப்போக்கில் சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி நடக்காமல் இருந்தது. அதன்பிறகு தெப்பக்குளம் பராமரிக்கப்படாததால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த தகவல் குறித்து 'தினத்தந்தி'யில் சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தினை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான பூமி பூஜை நேற்று முன் தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன் தலைமை தாங்கினார். அட்மா குழு துணை சேர்மன் தனபாலன் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி பொறியாளர் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, தனியார் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.