< Back
மாநில செய்திகள்
எலுமிச்சை சாறு குடித்து ஒவ்வாமையால் பாதிப்பு.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - நலமுடன் இருப்பதாக அமைச்சர் தகவல்
மாநில செய்திகள்

எலுமிச்சை சாறு குடித்து ஒவ்வாமையால் பாதிப்பு.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - நலமுடன் இருப்பதாக அமைச்சர் தகவல்

தினத்தந்தி
|
24 Sept 2023 10:40 PM IST

எலுமிச்சை சாறு குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெறும் 13 பேரும் நலமுடன் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில், எலுமிச்சை சாறு குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெற்று வரும் 13 பேரும் நலமுடன் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி அடுத்த ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர், எலுமிச்சை பழங்களை பறித்து, சிலிக்கான் ஜெல் ஐஸ் சேர்த்து, ஜூஸ் தயாரித்து குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறார்கள் உட்பட 13 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை, அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்