< Back
மாநில செய்திகள்
குற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாநில செய்திகள்

குற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தினத்தந்தி
|
16 May 2024 8:12 PM IST

குற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டிய நிலையில், ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த கமலாதேவி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது கணவர் கார்த்திக் மதிச்சியம் போலீசார் விசாரணையின்போது தாக்கியதால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு அவசர கால வழக்காக நீதிபதி வடமலை முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மாவட்டத்தில் கைது செய்யப்படும் நபர்கள் குற்றவிசாரணை பிரிவில் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து அரசு தரப்பில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 1 வாரத்திற்குள் வழக்கு விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்