< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவில் நிலங்களை ஆக்கிரமித்த குற்றச்சாட்டு: அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|25 March 2023 6:37 PM IST
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்தும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்த தடை கோரி தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கோவில் நிதி பயன்பாடு குறித்து துறை சாராத தணிக்கையாளர்களை கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அதேபோல் கோவில் நிலங்களை அறநிலையத்துறையே ஆக்கிரமித்துள்ளதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, இது சம்பந்தமாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அறநிலையத்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.